Asianet News TamilAsianet News Tamil

கடுப்பில் நீதிமன்றம் சென்ற மு.க.ஸ்டாலின்... வெறுங்கையோடு வந்த வழியே திருப்பி அனுப்பிய நீதிபதிகள்..!

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தாமதம் செய்வதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கை இன்று அவசர வழக்காக விசாரிக்க சாத்தியமில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர். 

local body election...chennai high court case in dmk
Author
Chennai, First Published Jan 2, 2020, 3:35 PM IST

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தாமதம் செய்வதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கை இன்று அவசர வழக்காக விசாரிக்க சாத்தியமில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர். 

தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில், முக்கிய முதல்வர் எடப்பாடியின் சொந்த ஊரில் முடிவுகள் அறிக்கப்படாமலும், அதேபோல், துணை முதல்வரின் போடி தொகுதியிலும், சங்ககிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதுவரை வெற்றி நிலவரங்களை அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

local body election...chennai high court case in dmk

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் தெரிவித்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக, காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு சதி செய்கின்றனர். முதல்வர் எடப்பாடியின் தொகுதியான எடப்பாடியில் எண்ணி முடிக்கப்பட்டு அறிவிக்கப்பட வேண்டிய முடிவுகளை அறிவிக்காமல் உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் இருந்தபடி அதிகாரிகளுக்கு முதல்வரின் மைத்துனர் உத்தரவிடுகிறார். மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். வாக்கு எண்ணிக்கை முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளேன் என தெரிவித்திருந்தார். 

local body election...chennai high court case in dmk

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தாமதம் செய்வதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது. அதில், எடப்பாடி, சங்ககிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதாக என மனுவில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கை இன்று அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios