Asianet News TamilAsianet News Tamil

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மன்றாடும் உயிர்கள்... கைகொடுத்த ஸ்டெர்லைட் ஆலை..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.820 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பலத்த பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்பட்டது.

Living lives begging for oxygen ... Sterlite plant handed over ..!
Author
Tamil Nadu, First Published May 13, 2021, 11:41 AM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.820 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பலத்த பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிக வேகமாக பரவி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.Living lives begging for oxygen ... Sterlite plant handed over ..!

இதன்படி மக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. இன்று முதல்கட்டமாக 4.820 மெட்ரிக்டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. இங்கு பாதுகாப்புடன் வந்த லாரியில் இருந்து ஆக்சிஜன் மருத்துவமனை சேமிப்பிக்கிடங்கில் சேகரிக்கப்பட்டது.

Living lives begging for oxygen ... Sterlite plant handed over ..!

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் 900 ஆயிரத்திற்கு மேற்பட்ட படுக்கைகள் உள்ளது. இந்த படுக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டதால் நாள் ஒன்றுக்கு 6 டன்னுக்கு குறையாமல் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மேலும் நெல்லை மருத்துவமனையில் நெல்லை , தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வந்து அனுமதியாவதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே நோயாளிகளை காக்கும் பொருட்டு தஞ்சாவூர், நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகிய பகுதிகளில் இருந்து மட்டும் ஆக்சிஜன் வந்து கொண்டு இருந்தது. தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஓரளவு ஆக்சிஜன் தட்டுப்படு கட்டுக்குள் வரும் என கூறப்படுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios