Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவால் பாதிப்புக்குள்ளான சிங்கங்கள்... வண்டலூருக்கு சென்ற மு.க. ஸ்டாலின்..!

சென்னை வண்டலூர் பூங்காவில் கொரோனாவால் சிங்கங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பூங்காவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
 

Lions affected by corona ... TN Chief minister Stalin visit to Vandalur..!
Author
Chennai, First Published Jun 6, 2021, 9:56 PM IST

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டன. மேலும் நீலா என்று பெயர் சூட்டப்பட்ட பெண் சிங்கம் கொரோனாவால் உயிரிழந்தது. இதனையடுத்து பூங்காவில் எல்லா சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டன. தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் கலந்தாலோசித்து கொரோனா பாதிப்பில் உள்ள சிங்கங்களுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிங்கங்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளும் தொற்றுக்குரியவ சிகிச்சையும் வழங்கப்பட்டுவருகின்றன.Lions affected by corona ... TN Chief minister Stalin visit to Vandalur..!
மேலும் வண்டலூர் பூங்கா மருத்துவர்கள், தலைமை வன பாதுகாப்பு அதிகாரி யுவராஜ் ஆகியோர் பூங்காவில் உள்ள பிற விலங்குகளை பரிசோதித்தனர். அதுமட்டுமல்ல, பூங்காவில் உள்ள சிறுத்தை, புலி உள்ளிட்ட பிற விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளும், வைட்டமின் மாத்திரைகளும் வழங்கப்பட்டன.Lions affected by corona ... TN Chief minister Stalin visit to Vandalur..!
இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொற்று பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளை எப்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளன, என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வண்டலூர் பூங்கா ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios