ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! 

“இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தி ஆதரவு பேச்சும் எதிர்ப்பும்

இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியைக் கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கூறியிருந்தார். மேலும் இந்திதான் நாட்டின் அலுவல் மொழியாக ஏற்கும் காலம் வந்துவிட்டது என்றும் அமித்ஷா தெரிவித்திருந்தார். அமித்ஷாவின் இந்தக் கருத்துக்கு இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பதிலளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

அதில், “இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத் தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்! ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பழுதாக்கும் வேலையைப் பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…