Asianet News TamilAsianet News Tamil

செருப்பை கையில் தூக்கிக் கொண்டு... கரடுமுரடான கற்களில் பயணித்து... மலைவால் மக்களின் மனதை குளிர வைத்த ஓ.பி.எஸ்!

மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார் தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

Lifting sandals in hand ... Traveling on rough rocks ... OPS that cooled the minds of the people by the mountain
Author
Tamil Nadu, First Published Oct 31, 2020, 5:39 PM IST

மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார் தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்.
               
தேனி மாவட்டம், போடி அருகே உள்ளது மேலப்பரவு கிராமம். இங்கு மலைவாழ் பழங்குடியின மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சுற்றி நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட பல்வேறு விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.Lifting sandals in hand ... Traveling on rough rocks ... OPS that cooled the minds of the people by the mountain

இந்த பகுதியின் குறுக்கே மேற்கு தொடர்ச்சிமலை பகுதியான குரங்கணி, கொட்டகுடி ஆறு செல்வதால் மழைக் காலங்களிலும், பருவ மழை காலங்களிலும், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இந்த சூழ்நிலையில் இப்பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்களும், விவசாயிகளும் தங்களது விளை பொருட்களை எடுத்துச் செல்ல முடியாமலும் நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பஸ்திரீகள் ஆற்றை கடக்க முடியாமல் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வந்தனர்.Lifting sandals in hand ... Traveling on rough rocks ... OPS that cooled the minds of the people by the mountain

அவர்கள் வசித்து வரும் வீடுகளும் மிகுந்த சேதமாகி உள்ளதாக தெரிவித்தனர். இன்று காலை மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்ற தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் அப்பகுதிக்கு நேரடியாகச் சென்று  அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். பின்னர், உடனடியாக 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர உத்தரவிட்டார். மேலும், அப்பகுதியில் சாலை வசதிகள் இல்லாமல் பழுதடைந்ததால் சாலைகள் அமைக்கவும் அப்பகுதி மக்கள் ஏற்கெனவே  கோரிக்கை விடுத்திருந்தனர். Lifting sandals in hand ... Traveling on rough rocks ... OPS that cooled the minds of the people by the mountain

இந்த கோரிக்கையை ஏற்று தற்போது அப்பகுதியில் சாலை செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியையும் பார்வையிட்ட தமிழக துணை முதல்வர், ஓ.பி.எஸ் உடனடியாக சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தங்களது நீண்ட நாள் கோரிக்கை தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் மூலமாக நிறைவேறியதை எண்ணி மலை கிராம பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதற்காக அந்த கிராம மக்கள், தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios