Life is a struggle - Rajini speech Stalin Comment

தூத்துக்குடி கலவரத்துக்கு சமூக விரோதிகள் புகுந்ததே காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்தை அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரஜினிகாந்த் அவர்கள் சமூக விரோதிகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிராக போராட்டம் நடத்தியதாக, அவர் கூறியது அவருடைய சொந்த குரல் இல்லை என்றார்.

இவருடைய பின்னணி குரல் பாஜக மற்றும் அ.தி.மு.க கட்சிகள் இருக்குமோ? என்ற சந்தேகம் எனக்கு வந்து உள்ளது. சூப்பர் ஸ்டார் என்றும், அவருக்கு தீவிரவாதிகள் எனக்கு தெரியும் என்று கூறிய ரஜினிகாந்த், தீவிரவாதிகள் யார்? என்று அடையாளம் காட்ட வேண்டும் என்றார். இது நாட்டுக்கு நல்லதாக அமையும், அதை ரஜினி அவர்கள் செய்வாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். வாழ்க்கையே போராட்டம்தான்; அதில் இந்தி எதிர்ப்பு போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ரஜினிக்கு என்பது ரஜினிகாந்த் அவர்களுக்கு தெரியும் என்று தான் நினைப்பதாக ஸ்டாலின் கூறினார்.