Asianet News TamilAsianet News Tamil

தமிழகம் மீட்போம்... மு.க.ஸ்டாலின் ஏவும் அடுத்த அஸ்திரம்..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக கலந்து கொள்ளும் 'தமிழகம் மீட்போம்!' எனும் தலைப்பிலான '2021-சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் மாவட்டங்கள் குறித்து திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

Lets save Tamil Nadu ... MK Stalin's next weapon ..!
Author
Tamil Nadu, First Published Dec 10, 2020, 11:58 AM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக கலந்து கொள்ளும் 'தமிழகம் மீட்போம்!' எனும் தலைப்பிலான '2021-சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் மாவட்டங்கள் குறித்து திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.Lets save Tamil Nadu ... MK Stalin's next weapon ..!

இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘’திமுக தலைவர் ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம், தருமபுரி, சேலம், திருநெல்வேலி/தென்காசி, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் காணொலிக் காட்சி மூலமாக 'தமிழகம் மீட்போம்!' எனும் தலைப்பிலான '2021-சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, மூன்றாவது கட்டமாக சிறப்பு பொதுக்கூட்டங்கள் கீழே குறிப்பிட்டுள்ள தேதிகளில் வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட திமுக மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடைபெறும்.

2020 டிசம்பர் 12 (சனி) - ராமநாதபுரம்

டிச. 14 (திங்கள்) - திண்டுக்கல்

டிச. 17 (வியாழன்) - கடலூர்

டிச. 19 (சனி) - திருவள்ளூர்

டிச. 23 (புதன்) - சிவகங்கை

டிச. 26 (சனி) - தஞ்சை

டிச. 28 (திங்கள்) - நாகை/ திருவாரூர்

டிச. 29 (செவ்வாய்) - திருவண்ணாமலை

டிச. 31 (வியாழன்) - அரியலூர்/பெரம்பலூர்" என அறிவித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios