Lets get Cauvery Water - Minister RP Uthayakumar

காவிரி நீரைப் பெறுவது உறுதி என்றும், காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு வேண்டும் என்றும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளா. 

செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இவ்வாறு கூறியுள்ளார். அரசியல் வரலாற்றில் 20 நாட்கள் நாடாளுமன்ற முடக்கம் என்பது காவிரி விவகாரத்தில் அதிமுக எம்.பி.க்கள் செய்தது மட்டும்தான். காவிரி நீரைப் பெறுவது உறுதி. காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு வேண்டும். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 

மேலும், மத்திய அரசை எதிர்த்து காவிரிக்காக உண்ணாவிரதம் இருந்தவர் ஜெயலலிதா, அதே போல் தற்போதைய முதலமைச்சரும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். எந்தெந்த வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமோ அந்த வகையில் அழுத்தம் கொடுக்கிறோம் என்று கூறினார்.

திமுக ஆட்சியில் இருந்தபோது, உரிமைகளை விட்டுக் கொடுத்ததால்தான் இன்று காவிரி விவகாரத்தில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி விவகாரம் 129 ஆண்டுகால பிரச்சனை என தெரிவித்தார்.

நமது அம்மா நாளிதழில் வெளியான கட்டுரை எழுதியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பத்திரிகையில் விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.