இந்துகளை விடுங்க திருமாவளவன் சார்... உங்க சமுதாயத்தை தான் ‘சனாதனத்தை ஏற்றுக்கொள்ளாததால்’ஒதுக்கி வைத்து விட்டார்களே?! உங்கள் சமுதாய பெண்கள் அதே சமுதாய ஆண்களால் எவ்வாறு நடத்தப்பட்டார்கள்? என புதிய தமிழகம் இளைஞரணி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்துமதத்தை இழிவு செய்து பிற மதங்களை உயர்வாக பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் திருமாவளவன் என்ற விமர்சனம் இந்து அமைப்புகளால் அவர் மீது வைக்கப்படுகிறது. இப்போது அவர் பேசிய ஒரு வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதில்,  ’’பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள். இந்து தர்மப்படி அனைத்து பெண்களும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டவர்கள் என இந்து மதம் கூறுவதாக அவர் விமர்சித்துள்ளார். பெண்களை மோசமாக பாவிக்கும் வகையில் இந்து மதம் கூறியிருப்பதை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.  ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள். இது பிராமணப் பெண்களுக்கும், சாதாரண அடிமட்டப்பெண்களுக்கும் பொறுந்தும். எல்லாப்பெண்களுக்கும் தீட்டு உண்டு என இந்து மதம் கூறுவதாக அவர் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் இந்து பெண்களை மிகவும் தரக்குறைவாக பேசிய திருமாவளவன் மீது பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அஸ்வத்தாமன்  புகார் 
அளித்துள்ளார். இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி பதவி பிரமாணம் எடுத்த ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் யாரும் ஒரு மதத்தை குறிப்பிட்டு அவதூறுகளை பேச கூடாது. ஆனால் இந்த திருமாவளவன் எப்படி இவ்வளவு தரம் தாழ்ந்து பேச முடிகிறது? நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா என்ன செய்கிறார்? என பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 

 

அதேவேளை இஸ்லாமிய- கிறிஸ்தவர்கள் திருமாவுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ’’முஸ்லிம் இயக்க தலைவர்களை விட அதிகமாக இஸ்லாமியர்களுக்கு ஆதரவான குரல்களையும், சங்பரிவாரத்தின் சதிவலைகளை குறித்து அவ்வப்போது நமக்கு விழிப்புணர்வும் செய்து வரும் அண்ணன் திருமாவளவன் அவர்கள் நடத்தும் அனைத்து போராட்டங்களில் முஸ்லிம்களான நாம் பங்கேற்பது நமது தார்மீக கடமை! எனக்கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி, இந்துகளை விடுங்க @thirumaofficial சார்... உங்க சமுதாயத்தை தான் ‘சனாதனத்தை ஏற்றுக்கொள்ளாததால்’ ஒதுக்கிவைத்து விட்டார்களே?! உங்கள் சமுதாய பெண்கள் அதே சமுதாய ஆண்களால் எவ்வாறு நடத்தப்பட்டார்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.