அதிமுக பொதுச்செயலாளர் என பொய்யான கல்வெட்டு வைத்த சசிகலா மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை அதிமுக எடுக்கும். மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் என கூறிவருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக தமிழக ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- சசிகலா அதிமுக கட்சியில் இல்லை. அவரைப் பற்றி நாங்கள் கவலை கொள்ளவில்லை. 

நீதிமன்றம் தேர்தல் ஆணையம் என அனைத்துமே நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று ஏற்கெனவே தெளிவுப்பட தெரிவித்துவிட்டனர். அதனால், சசிகலா பேசுவதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. அவர் எங்கள் கட்சியிலேயே இல்லை. பொழுதுபோகவில்லை என்பதற்காக சசிகலா ஏதோ செய்துக் கொண்டிருக்கிறார். ஊடகங்களே அவர் பேசுவதை பரப்பரப்பிற்காக பெரிதுப்படுத்துகின்றனர். 

அதிமுக பொதுச்செயலாளர் என பொய்யான கல்வெட்டு வைத்த சசிகலா மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை அதிமுக எடுக்கும். மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.