“தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2020-21 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க ஆட்சி நிறைவு பெறும் காலத்தின் கடைசி நிதிநிலை அறிக்கை. அடுத்த ஆண்டு எதிர்கொள்ளும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மக்கள் ஆதரவைப் பெற வேண்டும் என்ற ‘ஆசை’யில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது."
அதிமுக அரசுக்கு இதுதான் கடைசி பட்ஜெட் என்று இடதுசாரிகள் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்
.
தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சக பொறுப்பை வகித்துவரும் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். “2020-21 நிதிநிலை அறிக்கை தமிழக அ.தி.மு.க அரசின் கடைசி பட்ஜெட். இது மாதிரியான வாய்ப்பினை மீண்டும் ஒருமுறை அதிமுகவிற்கு தமிழக மக்கள் வழங்கமாட்டார்கள் என்பதை இந்த பட்ஜெட் உரை தெளிவாக்குகிறது.
தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளையும், உரிய வரி பங்கீட்டையும் தர மறுப்பதும், தாமதப்படுத்துவமான வஞ்சகப் போக்கையே மத்திய அரசு கடைபிடிக்கிறது. ஆனால் தமிழகத்தின் உரிமைகளை கேட்டுப் பெறுவதற்கு தைரியம், திராணியற்ற அரசாக அ.தி.மு.க அரசு உள்ளது என்பதை இந்த பட்ஜெட் உரை எடுத்துக் காட்டுகிறது. இந்த அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து தனது ஆட்சியை மட்டும் தக்க வைத்துக் கொள்வதில் குறியாக இருப்பதால், தமிழக மக்களின் நலன்கள், உரிமைகள் எல்லாம் மத்திய அரசிடம் காவு கொடுக்கப்படுகின்றன.

