கூட்டணிக்கட்சிகளும் இந்த போரட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த எம்பி ரவிக்குமார் ஆகியோர் வீட்டிற்குள் இருந்தபடியே தமிழக அரசைக் கண்டித்து கானொளிக்காட்சி மூலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

T.Balamurukan

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட இருக்கிறது. ஒரு பாட்டிலுக்கு விலை ஏற்றதுடன் விற்பனையாக இருக்கிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளான திமுக பாமக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் நாளை பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு பேட்ஸ் அணிந்து கொண்டு கண்டனம் தெரிவிக்க ஆதரவு திரட்டி வருகிறார். திடீர் மதுக்கடைகளை அதிமுக அரசு தீவிரம் காட்டியிருக்கிறது. மத்திய அரசும் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியைதராததைக் கண்டித்தும் நாளை போராட்டம் நடைபெற இருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கூட்டணிக்கட்சிகளும் இந்த போரட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த எம்பி ரவிக்குமார் ஆகியோர் வீட்டிற்குள் இருந்தபடியே தமிழக அரசைக் கண்டித்து கானொளிக்காட்சி மூலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Scroll to load tweet…