Asianet News TamilAsianet News Tamil

சசிகலா மீது வழக்கா..? முன்னாள் அமைச்சர் சூசகம்..!

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார். 
 

Lawsuit against Sasikala ..? Ex-minister hints ..!
Author
Tamil Nadu, First Published Oct 23, 2021, 5:56 PM IST

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், ‘’கடந்த ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் தற்போது முதலமைச்சராகவும் உள்ள மு.க.ஸ்டாலின் மழையால் ஏற்பட்ட குருவை சாகுபடி பாதிப்புகளை பார்வையிட்டார். பயிர்கள் இதையடுத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 50 ஆயிரம் வீதம் அரசு இழப்பீடு தர வேண்டும் என அப்போது வலியுறுத்தி இருந்தார். Lawsuit against Sasikala ..? Ex-minister hints ..!

ஆனால் தற்போது நூற்றுக்கணக்கான கிராமங்கள் நிவாரணத் தொகை வழங்குவதில் விடுபட்டு பூஜ்ஜியம் எனக் குறிப்பிட்டு இழப்பீடு இல்லை என்று தெரிவித்திருப்பது விவசாயிகளிடையே மிகுந்த வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. 

விவசாயிகள் இந்த பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் அறுவடை பரிசோதனை செய்தால் கண்டிப்பாக அது வெளிப்படைத்தன்மையாக இருக்கும். 100 சதவீத விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கையாக உள்ளது.

 Lawsuit against Sasikala ..? Ex-minister hints ..!

ஒரு ரைடா, இரண்டு ரைடா, மூன்று ரைடா தொடர்ந்து சோதனை பண்ணிக்கொண்டு இருக்கிறது திமுக அரசு. அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதிமுக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் பெற்று ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என நியமனம் பெற்று தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் அங்கீகாரம் பெற்று நாடாளுமன்ற தேர்தல், சட்ட மன்ற தேர்தல் என பல தேர்தல்களில் எதிர்கொண்டுள்ளோம். எனவே கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை’ என அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios