Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு குட்டிச்சுவரா போச்சு.. திமுகவை அட்டாக் செய்யும் எடப்பாடி பழனிசாமி ..!

தமிழகத்தில் இளைஞர்களை, மாணவர்களை சீரழிக்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்துடன் இணைந்து அதை தடை செய்ய மனமில்லாமல் இருக்கிறது திமுக அரசு. காவல்துறை திமுக அரசின் ஏவல்துறையாக செயல்பட்டு வருகிறது.  ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஓழுங்கு சீர்கெட்டுள்ளது. 

Law and order has deteriorated in Tamil Nadu... Edappadi Palanisamy
Author
Chennai, First Published May 30, 2022, 2:44 PM IST

ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்துடன் இணைந்து அதை தடை செய்ய மனமில்லாமல் இருக்கிறது திமுக அரசு என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி;- மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்த பாமக, பாஜகவுக்கு நன்றி. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கஞ்சா வழக்குகளில் சிக்கி இருப்பவர்களை ஏன் கைது செய்யவில்லை என எடப்பாடியார் கேள்வி எழுப்பியுள்ளார். 

Law and order has deteriorated in Tamil Nadu... Edappadi Palanisamy

தமிழகத்தில் இளைஞர்களை, மாணவர்களை சீரழிக்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்துடன் இணைந்து அதை தடை செய்ய மனமில்லாமல் இருக்கிறது திமுக அரசு. காவல்துறை திமுக அரசின் ஏவல்துறையாக செயல்பட்டு வருகிறது.  ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஓழுங்கு சீர்கெட்டுள்ளது. 

Law and order has deteriorated in Tamil Nadu... Edappadi Palanisamy

இந்தியாவிலேயே முதன்மையான முதலமைச்சர் நான் தான் என மு.க.ஸ்டாலின் சொல்லி கொள்கிறார். தமிழகத்தில் நூல் விலை உயர்வால் பல லட்சம் நெசவாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குப்பதிவு திமுக ஆட்சியின் அராஜகத்தை வெளிப்படுத்துகிறது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios