Lalu Yadav Protests Release By AIIMS Screams Conspiracy By PM Modi
உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே.
அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி.
* வீடு இல்லாமல் என் தோழியுடன் ஹாங்காங் தெருக்களில் வசித்து வருகிறேன். எங்களுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. உணவு கூட இல்லை.
- எட்டா நிகி (ஜாக்கி சானின் மகள்)

* அ.தி.மு.க.வினர் பதவிக்கால அலைபவர்கள் அல்ல. நான் அம்மா அவர்களின் உத்தரவுப்படி என் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தவன் தான்.
- தம்பிதுரை

* மத்திய அரசு குறைந்த அளவில் நிதி வழங்கினாலும் கூட, ஆந்திர மாநிலம் வளர்ச்சி அடைந்து வருகிறது. 24 மணி நேரமும் தங்குதடையற்ற மின்சாரம் வழங்குகிறோம். இது ஒரு சாதனைதான். எங்கள் வளர்ச்சிக்கு மோடி தேவையில்லை.
- சந்திரபாபு நாயுடு
* கட் - அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதையும், மாலை அணிவிப்பதையும் தடுக்காத நடிகர்கள், கடைசியில் ரசிகர்களை முட்டாளாக்கிவிட்டு, அரசியலில் நுழைகின்றனர். இப்படியொரு கேவலமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது.
- பாரதிராஜா.
* தனது நூலகத்தையே பெரும் செல்வமாக மதித்தவர் அம்மா ஜெயலலிதா அவர்கள். அதனால்தான் எந்த விஷயத்தில் தெளிவான அறிவை பெற்றிருந்தார்.
- அமைச்சர் ராமச்சந்திரன்.

* நான் கிங் மேக்கராக இருக்க மாட்டேன். ஆனால் கர்நாடக மக்களின் ஆதரவுடன் நிச்சயம் கிங் ஆவேன். இது மக்கள் எனக்கு தந்திருக்கும் உத்வேகம்.
- குமாரசாமி.
* என்னை எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி மீண்டும் சிறைக்கு அனுப்பியதன் பின்னணியில் பெரிய சதி இருந்தது. அறைகுறை சிகிச்சையுடன் வெளியேற்றினார்கள்.
- லாலுபிரசாத் யாதவ்

* கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் வாக்களிக்க முடியாமல் இருப்பது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது.
- விஜய் மல்லையா.
* படித்த இளைஞர்கள் அரசு வேலையை தேடி அலைவதை விட்டு, பான்கடை வைத்தோ, மாடு மேய்த்து பால் கறந்தோ சம்பாதிக்கலாம்.
- பிப்லாப் தேப் (திரிபுரா முதல்வர்)
* சரத்குமாருடன் இணைந்து இனிமேல் நான் செயல்படப்போகிறேன்.
- சீமான்
