Asianet News TamilAsianet News Tamil

உச்சக்கட்ட டென்ஷனில் உத்தரப்பிரதேசம்… பிரதமரை கேள்வி கேட்ட பிரியாங்கா மீது பாய்ந்தது வழக்கு…!

உரிய அனுமதி இல்லாமலும், வழக்கு பதிவு செய்யாமல் என்னை 28 மணி நேரமாக காவலில் வைத்து உள்ளது உங்கள் அரசாங்கம்! விவசாயிகளை கொன்றவர்களை ஏன் கைது செய்யவில்லை என பிரதமர் மோடிக்கு பிரியங்ககாந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.

Lakhimpur violence FIR filed against congress leader priyanka gandhi
Author
Lakhimpur, First Published Oct 5, 2021, 3:22 PM IST

உரிய அனுமதி இல்லாமலும், வழக்கு பதிவு செய்யாமல் என்னை 28 மணி நேரமாக காவலில் வைத்து உள்ளது உங்கள் அரசாங்கம்! விவசாயிகளை கொன்றவர்களை ஏன் கைது செய்யவில்லை என பிரதமர் மோடிக்கு பிரியங்ககாந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்த்ல் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தங்கும் விடுதியில், வீட்டுக்காவலில் வைத்து போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இன்று காலையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த பிரியங்கா காந்தி பிரதமர் மோடிக்கு காட்டமான கேள்விகளை எழுப்பியிருந்தார்.

Lakhimpur violence FIR filed against congress leader priyanka gandhi

விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்த பிரியங்கா காந்தி, தம்மை கைது செய்த காவல்துறை, காரை விட்டு மோதியவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து மற்றொரு பதிவில், விவசாயிகள் மீது கார் மோதிய வீடியோவை காண்பித்து, இந்த வீடியோவைப் பார்த்தீர்களா பிரதமரே.. உங்கள் அரசில் இடம்பெற்ற மத்திய மந்திரின்  மகன் எவ்வாறு விவசாயிகளை வாகனத்தால் மோதுகிறார் எனப் பார்த்தீர்களா? இந்த வீடியோவை தயவுசெய்து பார்த்து, இந்த மந்திரியை  ஏன் இதுவரை நீக்கவில்லை, அவரின் மகன் ஏன் கைது செய்யப்படவில்லை என்பதை விளக்குங்கள். என பதிவிட்டிருந்தார்.

Lakhimpur violence FIR filed against congress leader priyanka gandhi

மேலும், இந்திய தேசத்திற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர்கள் விவசாயிகள். அவர்களின் மகன்கள் தேசத்தின் எல்லைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீங்கள் என்னைப் போன்ற தலைவர்களை முதல் தகவல் அறிக்கையின்றி கைது செய்துள்ளீர்கள். ஆனால், அந்த மந்திரியின்  மகனை ஏன் சுதந்திரமாக அலையவிட்டீர்கள்? லக்னோ வரும் பிரதமர் மோடி லக்கிம்பூருக்கு வரவேண்டும். தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த, தேசத்தின் ஆன்மாவான, நமக்கு அன்னத்தை வழங்கும் விவசாயிகள் வேதனையை, வலியைக் கேட்க வேண்டும். இது உங்கள் கடமை மோடி ஜி என பிரியங்கா பதிவிட்டிருந்தார்.

Lakhimpur violence FIR filed against congress leader priyanka gandhi

இந்தநிலையில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி மீது 35 மணி நேரத்திற்குப் பின்னர் உத்தரப்பிரதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைதியை நிலைநாட்டும் சட்டத்தை மீறியதாக பிரியங்கா உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பிரியங்கா கைதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராடி வருகின்றனர். இந்தநிலையில், பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பிய சில மணி நேரங்களில் பிரியங்கா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சியினரை மேலும் கொதிப்படையைச் செய்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios