நெஞ்சுவலி காரணமாக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்டம் குறிச்சி கிராமத்தில் பிறந்த இவர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், மத்திய அரசில் சமூகநலத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். இவரது மனைவி ஜெயந்தி மெகா டிவி தொலைக்காட்சியை நடத்தி வருகிறார். 

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர்  கே.வி.தங்கபாலு நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதேபோல கடந்த ஜூன் மாதம் தங்கபாலுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோ கிராம் சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.