நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வர உள்ள இந்த தருணத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் பேச்சாளர்களும் பிரபலங்களும் தங்களுடைய ஆதரவு கட்சியினருக்கு பெரும் ஆதரவை தெரிவித்து அனல் பறக்கும்  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வர உள்ள இந்த தருணத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் பேச்சாளர்களும் பிரபலங்களும் தங்களுடைய ஆதரவு கட்சியினருக்கு பெரும் ஆதரவை தெரிவித்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு மதுரை உசிலம்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது நடிகை குஷ்புவை பார்ப்பதற்காக பொதுமக்கள் திரளாக கூடினர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜு, வைகை ஆற்றில் எருமை மாட்டை குளிப்பாட்டினால் கூட கூட்டம் அதிகமாக தான் வரும் என கிண்டலாகப் பேசி இருந்தார். அது மட்டுமல்லாமல் அதற்கிடையே குஷ்புவின் வயதையும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், "அதிமுக விஞ்ஞானியான செல்லூர் ராஜுவுக்கு வயது ஆகிவிட்டது நல்லா தெரியுது.. பாவம் என்னென்னமோ பேசிக்கொண்டு இருக்கிறார்.. இதுல என்ன முக்கியமான விஷயம் என்றால் எதிர்க்கட்சியினரும் என்னை இந்த அளவுக்கு கவனிக்கிறார்கள் என்பதே..நான் சினிமாவில் இருந்து விலகி 30 வருடங்கள் ஆகியும் இந்த அளவுக்கு மக்கள் என்மீது மரியாதை வைத்துள்ளனர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி என தெரிவித்து உள்ளார்.

Scroll to load tweet…

அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு நடுவே, இவர்கள் இருவருக்கும் இப்படி ஒரு பிரச்சனையா என பல்வேறு தரப்பினர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.