kushpo says stalin will be elected as tn cm in 2019
2019ல் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார்: குஷ்பு,
காங்கிரசின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான குஷ்பு,தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார் என தெரிவித்து உள்ளார்
சென்னை வேலப்பன்சாவடியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்தநாள் விழா தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள்,உறவினர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துக்கொண்ட அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பு, 2019ல் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலினும், இந்தியாவின் பிரதமராக ராகுலும் பதவியேற்பார்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார்
இவருடைய பேச்சுக்கு தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
ஆனால்,தற்போது திமுகவிற்கு ஆதரவாக வெளியாகி உள்ள 2G அலைக்கற்றை தீர்ப்பை வைத்து பார்க்கும் போது,அடுத்ததாக பாஜக உடன் திமுக கூட்டணி வைக்க திட்டமா என பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில்,குஷ்புவின் பேச்சு தற்போது ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது .
