Asianet News TamilAsianet News Tamil

"தினகரனுக்கு எப்படி இவ்வளவு ஓட்டுகள் கிடைத்தது!? – குஷ்பு சொல்லும் பகீர் தகவல்...

Kushboo says that How to Dhinakaran got this much vots in RK nagar By Poll
Kushboo says that How to Dhinakaran got this much vots in RK nagar By Poll
Author
First Published Dec 26, 2017, 5:57 PM IST


ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு டிடிவி தினகரன் அல்ல என்றும், தினகரனின் குறிக்கோள் தமிழகத்தில் ஆட்சியைக் கலைப்பது என்ற எண்ணம்தான் என்றும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. தினகரனுக்கு கிடைத்தது ஜெயலலிதாவின் அனுதாப ஓட்டுகள் என்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைதேர்தலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியை வீழ்த்திவிட்டு சுயேச்சை வேட்பாளரான டிடிவி தினகரன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Kushboo says that How to Dhinakaran got this much vots in RK nagar By Poll

இந்நிலையில், தினகரனின் வெற்றி குறித்தும், திமுக வேட்பாளர் மருதுகனேஷ் தோல்வி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மிகப் பெரிய தலைவர். ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயலலிதாவைவிட தினகரன் அதிகம் ஓட்டு பெற்றுள்ளார். ஜெயலலிதா இருந்தபோது அவரை தான் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறேன்.

ஆர்.கே.நகரில், திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ் டெபாசிட் கூட வாங்கவில்லை என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த குஷ்பு;  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி – துணைமுதல்வர் பன்னீர் செல்வம், ஜெயலலிதாவுக்கு துரோகமிழைத்துள்ளனர் என்றும் கூறி வருகிறார். தினகரனுக்கு கிடைத்தது ஜெயலலிதாவின் அனுதாப ஓட்டுகள், எனவே தினகரனின் குறிக்கோள் தமிழகத்தில் ஆட்சியைக் கலைப்பது என்ற எண்ணம்தான். இதனால் தினகரன் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் இப்போது திமுக, வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் இல்லை.

Kushboo says that How to Dhinakaran got this much vots in RK nagar By Poll

மேலும் செய்தியாளர்களுக்கு பதிலளித்த குஷ்பூ...  தினகரன், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு அல்ல, ஜெ. வீடியோவை வெளியிடாமல் வைத்திருந்த தினகரன் பயந்தாகொள்ளியா? தினகரன் வெற்றி மூலம் பணம் பேசியிருக்கிறது தெளிவாக தெரிகிறது. ஜெயலலிதாவைவிட தினகரன் சிறந்த அரசியல்வாதி கிடையாது ஆனால், "தினகரனுக்கு கிடைத்தது ஜெயலலிதாவின் அனுதாப ஓட்டுகள் கிடைத்துள்ளது என கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios