Asianet News TamilAsianet News Tamil

14 பேரையும் அமைச்சராக்குறோம்... ஆட்சியைக் காப்பாத்துறோம்... கர்நாடகாவில் அதிரிபுதிரியாக யோசிக்கும் குமாரசாமி!

காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருப்பது கர்நாடகாவில் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் 10 எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். 

Kumarasamy plan to expand his ministry to avoid falling government
Author
Bangalore, First Published Jul 8, 2019, 6:34 AM IST

 கர்நாடகாவில் ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் 14 எம்.எல்.ஏ.க்களுக்கும் அமைச்சர் பதவி தருவது குறித்து முதல்வர் குமாரசாமி தீவிரமாகப் பரிசீலித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Kumarasamy plan to expand his ministry to avoid falling government
கர்நாடகாவில் குமாரசாமி முதல்வராகப் பொறுப்பேற்றது முதலே அவருடைய தலைக்கு நேராக கத்தி தொங்க ஆரம்பித்துவிட்டது. ஒரு புறம் காங்கிரஸ் கட்சி குடைச்சல் என்றால், இன்னொரு புறம் ஆட்சியை வீழ்த்த பாஜக புதிய புதிய வியூகங்களை அரங்கேற்றியது. அவ்வப்போது செத்து செத்து பிழைத்துக்கொண்டிருக்கும் குமாரசாமி ஆட்சிக்கு தற்போது 14 எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து முடிவுரை எழுதத் தொடங்கிவிட்டார்கள்.Kumarasamy plan to expand his ministry to avoid falling government
காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருப்பது கர்நாடகாவில் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் 10 எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இந்த எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா பின்னணியில் பாஜக இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டிவருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் முயற்சி செய்துவருகிறது. இவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் இதுவரை ஏற்கவில்லை.

Kumarasamy plan to expand his ministry to avoid falling government
இந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் குமாரசாமி, தனது பயணத்தைப் பாதியில் முடித்துகொண்டு பெங்களூருவுக்குத் திரும்பினார். நேற்று முழுவதும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தி நடத்தினர். மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனையில், ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள தற்போது ராஜினாமா செய்துள்ள 14 பேருக்கும் அமைச்சர் பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி முதல்வர் குமாரசாமி தீவிரமாகப் பரிசீலித்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.Kumarasamy plan to expand his ministry to avoid falling government
மேலும் ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலோனர் சித்தராமையின் ஆதரவாளர்கள் என்பதால், அவருடை ‘கை’ இதில் இருக்கும் என்றும் மதசார்பற்ற ஜனதாதள நிர்வாகிகள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios