kumarasami tensed due to mla escape
100 கோடி தருவதாக ஆசை...! மயக்கத்தில் எம்எல்ஏ... கலக்கத்தில் குமாரசாமி..!
காங்கிரஸூடன் மட்டும் தான் கூட்டணி என மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி அறிவித்து உள்ளார்
பெங்களூரில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது,
காங்கிரஸூடன் மட்டும் தான் கூட்டணி என்று எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பிறகு மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் மஜத எம்எல்ஏ கூட்டத்தில் 2 எம்எல்ஏக்கள் கலந்துக்கொள்ள வில்லை என தெரிகிறது.
இந்நிலையில் பாஜக பற்றி பேசிய குமாரசாமி, 100 கோடி தருவதாக எங்கள் எம்எல் ஏக்களுக்கு ஆசை காட்டுகிறது பாஜக என்றும், பேரம் பேசி வருகிறது பாஜக.
எனவே எங்கள் எம்எல்ஏக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என தெரிவித்து உள்ளது
மேலும் ஏற்கனவே பல எம்எல்ஏக்கள் பாஜகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால், குமாரசாமி கலக்கத்தில் உள்ளார். மேலும் மஜத காங்கிரசுடன் தான் கூட்டணி என அறிவித்த பின்பு எம்எல்ஏக்களை தக்க வைத்துக்கொள்ள பெரும்பாடு பட்டு வருகிறது.
மேலும் பாஜக பெரும்பான்மையான இடத்தை பிடித்து உள்ளதால், தனி பெரும்பான்மை பெற்று விளங்குகிறது.104 இடங்களை பெற்று உள்ள நிலையில் ஆட்சி அமைக்க, 13 எம்எல் ஏக்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்நிலையில் சுயேட்சையாக வெற்றி பெற்ற 2 எம்எல்ஏக்களில் ஒரு எம்எல்ஏ பாஜக விற்கு ஆதரவு தெரிவிதுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் சில எம்எல்ஏக்கள் காணவில்லை என்பதால், ஆட்சி அமைக்க போவது யார் என்ற சிக்கலான, அதே சமயத்தில் திரில்லிங்கான அரசியல் காலமாக மாறி உள்ளது கர்நாடகா.
