திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிருந்தும் தற்காலிகமாக (Suspension) நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.. எடப்பாடி துரோகம் எல்லோருக்கும் தெரியும். ரவுண்டு கட்டி அடித்த ஸ்டாலின்.

கட்சி தலைமைக்கு எதிராக தொடர்ந்து சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்ததால் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டுள்ளார். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;- தமிழ் மொழியை மீறி இந்தி திணிப்பை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் ..! ஸ்டாலின் தீர்மானத்திற்கு ஓபிஎஸ் ஆதரவு