அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கை சசிகலா தொடர்ந்து நடத்துவார் என சசிகலாவை சிறையில் சந்தித்துவிட்டு திரும்பிய தினகரன் கூறியிருந்த நிலையில், சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில் அமமுக பொதுச் செயலாளராக  தினகரன் நியமிக்கப்பட்டது குறித்தும், சசிகலா ஒப்புதலுடன்தான் இந்த மாற்றம் நடந்ததா?  போன்ற பற்றியும் பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார்.

தினகரன் அ.ம.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து, என் அத்தை சசிகலா சொன்னார் என்ற ஒரே காரணத்தினால், தங்கள் பதவிகளைத் துறந்து, அதிமுக தீவிர விசுவாசிகள் தினகரனின் பின்னால் நின்றனர். ஆனால், தினகரனின் இந்த முடிவு அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இவை அனைத்துமே தினகரனால் ஏற்கெனவே திட்டமிட்டு, அதன்படி அரங்கேறுகின்றன. எனக் கூறியிருக்கிறார்.

மேலும், அதிமுகவை இனி ஒரு போதும் அவர் கைக்குள் கொண்டுவர முடியாது அதுமட்டுமல்ல, அதிமுக என்றைக்குமே தினகரனின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்குச் சாத்தியமே இல்லை எனக் கூறிஉள்ளார்.

சுயேச்சையாக தேர்தல் களத்தில் நின்றுள்ள அவருடைய வேட்பாளர்களில் யாராவது வெற்றிபெற்றால், அவர்கள் வேறு கட்சிக்கு மாறிவிடுவார்களோ என்கிற பீதியும் தினகரனுக்கு இருக்கிறது. அதனாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.