Asianet News TamilAsianet News Tamil

திமுக தொடர்ந்த வழக்கு.. அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு சிக்கல்..!

வேட்பு மனுவில் தன்னுடைய நிலம் தொடர்பான தகவலை அசோக்குமார் மறைத்துள்ள நிலையும், அதை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது சட்டவிரோதம் என செங்குட்டுவன் குறிப்பிட்டுள்ளார். அசோக்குமாரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி செங்குட்டுவன் தொடர்ந்த வழக்கு ஓரிரு வாரங்களில் விசாரணைக்கு வர உள்ளது. 

krishnagiri constituency..DMK case against AIADMK candidate victory
Author
Chennai, First Published Jul 1, 2021, 12:23 PM IST

கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் அசோக்குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் செங்குட்டுவனை 794 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், அசோக்குமாரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி செங்குட்டுவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

krishnagiri constituency..DMK case against AIADMK candidate victory

அதில், வாக்கு எண்ணிக்கையின் போது அசோக்குமார் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 605 தபால் வாக்குகளை எண்ணாமல் தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டதாக செங்குட்டுவன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வேட்பு மனுவில் தன்னுடைய நிலம் தொடர்பான தகவலை அசோக்குமார் மறைத்துள்ள நிலையும், அதை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது சட்டவிரோதம் என செங்குட்டுவன் குறிப்பிட்டுள்ளார். அசோக்குமாரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி செங்குட்டுவன் தொடர்ந்த வழக்கு ஓரிரு வாரங்களில் விசாரணைக்கு வர உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios