kp munusamy warns natarajan
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிப்பதை நடராஜன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என அதிமுக முன்னாள் எம்.பி. கே.பி.முனுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, ஜெயலலிதாவின் புகழை சிதைக்கும் வகையில் நடராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இதை நடராஜன் நிறுத்த வேண்டும் என தொண்டர்கள் சார்பில் எச்சரிக்கை விடுக்கிறோம். ஜெயலலிதா ஆட்சியில் செய்த சாதனைகளை கொச்சைப்படுத்தும் விதமாக நடராஜனின் கருத்துகள் உள்ளன.
ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட திட்டங்களை அவர் தயார் செய்து கொடுத்ததுபோல் நடராஜன் பேசியுள்ளார். இதுபோன்ற பேச்சுகளும் செயல்களும் தொடர்ந்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். நடராஜன் ஒரு கிரிமினல் என எம்.ஜி.ஆரால் வெளியேற்றப்பட்டவர். நடராஜன் அதிமுகவின் கொடியுடன் எங்கும் செல்ல முடியாது. அப்படி சென்றால் தடுத்து நிறுத்திவிடுவோம் என கே.பி.முனுசாமி எச்சரித்துள்ளார்.
