Asianet News TamilAsianet News Tamil

பாஜக எங்கள் முதுகில் ஏறி தான் சவாரி செஞ்சாகனும்... மீண்டும் அதிரடி சரவெடியாக வெடித்த கே.பி.முனுசாமி...!

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி. தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். 

KP Munusamy slams BJP
Author
Chennai, First Published Jan 9, 2021, 3:27 PM IST

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி. தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். 

அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னையில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஒபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட கட்சி பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி;- அதிமுகவில் ஸ்லீப்பர் செல் என்பது இனிமேல் இல்லை. யார் வெளியே வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. அவர் வெளியே வந்தாலும் அவருக்கு ஆயிரம் பிரச்சனைகள் உள்ளது என சசிகலாவை மறைமுகமாக சாடினார். 

KP Munusamy slams BJP

மேலும், சட்டமன்றத்தேர்தலில் அதிமுக - திமுகவிற்கு இடையேதான் போட்டி. தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் அதிமுக அல்லது திமுக முதுகில் ஏறிதான் பயணம் செய்ய வேண்டும். ஜனநாயக அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் தான் போட்டி என்றார். அதிமுக கூட்டணியில் தேசிய கட்சியான பாஜக இருக்கும் நிலையில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

KP Munusamy slams BJP

கடந்த மாதம் அதிமுக தேர்தல் பிரச்சால பொதுக்கூட்டத்தில்  கடந்த 50 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள்தான் தேசிய கட்சிகளை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை. ஆனால், இப்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கருங்காலி கூட்டத்தினர் தமிழகத்திற்குள் நுழைய பார்ப்பதாக பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios