திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைப் போல தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் முகநூலில் பதிவிட்டிருந்தார். தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அந்த பதிவை நீக்கியதோடு, தனது முகநூலை நிர்வகிப்பவர்தான் அந்த பதிவை போட்தாகவும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

எனினும் எச்.ராஜாவுக்கு எதிரான எதிர்ப்புகள் தமிழகத்தில் அடங்கிய பாடில்லை. பெரியார் சிலை உடைக்கப்படும் என ராஜா பதிவிட்ட நிலையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் சிலர் பெரியார் சிலையை உடைத்தனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த பரபரப்பு அடங்கும் முன்னரே சென்னை திருவொற்றியூரில் அம்பேத்கர் சிலை மீது பெயிண்ட் வீசப்பட்டது. சமூக நீதிக்கும் எதிராக போராடிய தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுவதும் உடைக்கப்படுவதும் தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாஜக மற்றும் அக்கட்சியின் தேசிய செயலாளரான எச்.ராஜாவை கண்டித்து நாட்டுப்புற கலைஞர் கோவன், அதிரடியான பாடல் ஒன்றை பாடியுள்ளார். சமூகத்தில் நிலவும் அவலங்கள், அரசின் அத்துமீறல்கள் ஆகியவைக்கு எதிராகவும் மக்கள் நலனை கருத்தில்கொண்டு சமுதாயப்பாடல்களை பாடிவரும் நாட்டுப்புற கலைஞர் கோவன், பாஜக மற்றும் எச்.ராஜாவிற்கு எதிராக அதிரடியான பாடல் ஒன்றை தற்போது பாடி வெளியிட்டுள்ளார்.

பெரியார் சிலை உடைக்கப்படும் என பேசிய எச்.ராஜாவை அந்த பாடலில் விளாசியுள்ளார். ராஜாவுடன் நிறுத்தாமல், பாஜகவையும் கடுமையாக விமர்சித்துள்ளார் கோவன். மிகவும் அதிரடியான வரிகளால் பாஜகவையும் அதன் அத்துமீறல்களையும் கோவன் வெளிப்படுத்தியுள்ளார்.

கோவனின் பாடல் இதோ..

<iframe frameborder="0" width="480" height="270" src="//www.dailymotion.com/embed/video/x6fvqxt" allowfullscreen allow="autoplay"></iframe>