உதயநிதி ஏன் செங்கல்லை தூக்குனாருனு.. இப்போ தெரியுதா..? திமுகவை தெறிக்கவிட்ட வானதி சீனிவாசன்

உதயநிதி ஸ்டாலின் செங்கலை கையில் வைத்துக்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு,  எய்ம்ஸ் கட்டுமான பணியை துவக்கி விட்டார்களா? மக்கள் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும் என்று திமுகவை தெறிக்க விட்டுருக்கிறார் கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.

Kovai south mla vanathi seenivasan about aims madurai and udhayanidhi stalin aims bricks issue

வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை செல்வதற்காக சென்னையில் இருந்து,  விமானம் மூலம் மதுரை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘வருகிற 12-ஆம் தேதி மோடியின் தமிழக வருகையை போது புதிய திட்டங்கள் வருமா என்ற கேள்விக்கு,  12ஆம் தேதி பிரதமர் அரசு விழாவிற்கு வருகை தரும்பொழுது பாஜகவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக மட்டுமே தற்போது முடிவாகியுள்ளது. புதிய திட்டங்கள் அறிவிப்பதை சொல்லிவிட்டு தான் அறிவிப்பார்கள் தற்போது மருத்துவக்கல்லூரி திறந்து வைப்பதற்காக தான் வருகிறார்.

Kovai south mla vanathi seenivasan about aims madurai and udhayanidhi stalin aims bricks issue

தற்போது பிரதமர் அரசு விழாவாக வருவதால் கோபேக்மோடி காட்ட முடியாது என்று திமுகவின் கருத்து குறித்த கேள்விக்கு,  தமிழகத்திற்குரிய திட்டங்களை பிரதமர் தொடக்கி வைக்க வருகின்ற பொழுது அதை தமிழகத்தின் சார்பாக அனைவரும் வரவேற்க வேண்டும். கடந்த காலத்தில் திமுகவினர் ஆயுத தளவாட கண்காட்சியை பிரதமர் திறந்து வைக்க வரும் பொழுது கோபேக்மோடி என்று கூறினர். 

அந்த திட்டத்தின் மூலமாக 2000 கோடி முதலீடு நடந்திருப்பதாக சட்டமன்றத்தில் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். பிரதமரை நீங்கள் திரும்பிப் போ என்று கூறினாலும் கூட அந்த திட்டத்தால் 2000 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு இன்று கிடைத்துள்ளது. இவையெல்லாம் அவர்கள் இன்று சரியாக புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறோம்.

Kovai south mla vanathi seenivasan about aims madurai and udhayanidhi stalin aims bricks issue

தமிழகத்தை மத்திய அரசு மாற்றான் தாய் பிள்ளையாக பார்க்கிறது என்று எம்பி மாணிக்கம் தாகூர் கூறியது குறித்த கேள்விக்கு, எந்தெந்த விதத்தில் மாற்றான் தாய் பிள்ளைகளாக பார்க்கிறது என்று அவர்களை புள்ளிவிபரம் கொடுக்கச் சொல்லுங்கள். அது டிபன்ஸ் காரிடார் ஆக இருக்கட்டும் சாலை வசதிகள் ஆக இருக்கட்டும் தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்திற்காக மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். 

மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் இரண்டு மூன்று திட்டங்கள் அமல்படுத்த முடியாத நிலையே உள்ளது இது மாற்றாந்தாயின் மனப்பான்மையா? மத்திய அரசு நிதி கொடுத்தால் கூட அதனை சரிவர பயன்படுத்த முடியாத இடத்தில் தமிழகம் இருப்பது வேதனைக்குரியது.

Kovai south mla vanathi seenivasan about aims madurai and udhayanidhi stalin aims bricks issue

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் ஜப்பான் பிரதமர் தான் நம்ப வேண்டும் என்று எம்பி மாணிக்கம் தாகூர் கூறியது குறித்த கேள்விக்கு,  இதையெல்லாம் நாங்கள் முன்பு சொன்ன போது அவர்கள் காதில் விழவில்லையா. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தொடர்ச்சியாக நிதி உதவி கிடைத்தால் தான் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது. கொரோனா சூழ்நிலை காரணமாக ஜப்பானில் இருந்து ஒரு குழு இங்கு வந்து ஆய்வு கொள்வதற்கு தாமதமாகிறது. 

இது தெரிந்திருந்தும் எய்ம்சை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக கூறிவிட்டு, உதயநிதி ஸ்டாலின் செங்கலை கையில் வைத்துக்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எய்ம்ஸ் கட்டுமான பணியை துவக்கி விட்டார்களா? ஏன் தாமதமாகிறது? 7 மாத காலமாகியும் ஒற்றைச் எங்களை கையில் வைத்து ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்? அப்போது விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் அரசியலுக்காக ஒற்றை செங்கலை வைத்து மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது’ என்று வானதி சீனிவாசன் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios