கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் என்றாலே தமிழர்களும் அங்கு வாழும் தொழிலாளர்களும்தான் ஞாபகத்துக்கு வருவார்கள். கோலார் தங்க வயலில் பணியுரியும் பெரும்பாலான தொழிலாளர்களில் பெரும்பாலோனோர் தமிழர்கள்தான்.

இந்த கோலார் தங்கவயல் சட்டமன்றத் தொகுதியில் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுக ஜெயித்து தனது செல்வாக்கை நிலைநாட்டி வருகிறது. இந்த தொகுதியில் மூன்று முறை அதிமுக எம்எல்ஏ வாக இருந்த பக்தவச்சலம்.

இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றி இருந்தார். இந்நிலையில் பக்தவச்சலம் நேற்று இரவு காலமானார். இதையடுத்து அவரது உடலுக்கு அதிமுக மற்றும் கோலார் தங்கவயல் தெரிழிலாள்ர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருக்ன்றனர்.

கர்நாடக தமிழர் நலனுக்காகவும், தங்கச்சுரங்க தொழிலார்கள் நலனுக்காகவும் பாடுபட்டவர் பக்தவச்சலம் என்பது குறிப்பிடத்தக்கது..