கை நழுவி போகும் “கொடநாடு”.....! அடுத்தடுத்து என்ன ?

சசிகலா, சுதாகரன் , இளவரசிக்கு எதிராக வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்பு, இன்று 10.30 மணிக்கு வெளியானது. இந்த தீர்ப்பில் சசிகலாவிற்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. அதன்படி சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறையும், 1௦ கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கொடநாடு :

சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா குற்றவாளி என அறிவிக்கப்பட்டது மட்டுமின்றி, அவருக்கு சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது. மேலும் கொடநாடு உள்பட அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

எந்த விஷேச சலுகையும் இல்லை :

முன்னதாக , இதே சொத்த குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் கைதான போது, அவருக்கு சிறையில் வழங்கப்பட்ட A பிரிவு வசதி, சசிகலாவுக்கு வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறையில் எந்த விசேஷ சலுகையும் காட்டக்கூடாது எனவும் கடுமையாக தீர்வு கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், சசிகலா வசம் உள்ள அனைத்து சொத்துக்களும் ஒவ்வொன்றாக பறிமுதல் செய்ய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.