Asianet News TamilAsianet News Tamil

இத மட்டும் நீங்க செய்யலன்னா; பரிட்ச்சையில மாணவர்களை காப்பி அடிக்க வைப்போம்... மீசையை முறுக்கும் முன்னாள் அமைச்சர்...

KN Nehru Controversial speech about Neet Exam
KN Nehru Controversial speech about Neet Exam
Author
First Published Feb 7, 2018, 3:25 PM IST


நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கவில்லை எனில் தேர்வில் மாணவர்களை காப்பி அடிக்க வைப்போம் என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு என பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சியில் நேற்று நடந்த நீட் தேர்வுக்கு எதிராகத் திராவிடர் கழகம் சார்பில் அனைத்துக் கட்சி ஆர்பாட்டத்தில்,  திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசினார். அப்போது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முயற்சி செய்வோம். ஒருவேளை நீட் தேர்விலிருந்து விளக்கு பெற முடியவில்லை என்றால், மாணவர்களை காப்பி அடிக்கவாது விடுவோம். பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் மாணவர்கள் காப்பி அடிக்க அனுமதிக்கப்படும் போது, தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மட்டும் எத்தனை நாட்களுக்கு உத்தமசீலர்களாக இருப்பது எனவும் பேசினார்.

மேலும் பேசிய அவர் அரசுப் பணியாளர்கள் தேர்வில், வெளிநாட்டவர்களைக் கொண்டுவந்துவிட்டார்கள். லாலு பிரசாத் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் இங்கு ரயில்வே பணிக்கு வந்தனர்.  இவ்வளவு பேர் பணிக்கு எப்படி வந்தார்கள்? அவர்களுக்குத் தேர்வுத்தாள்கள் முதலிலேயே வழங்கப்பட்டுவருகிறது. கல்விக்கூடம் நடத்தும் பலர் இங்கிருக்கிறார்கள், நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கவில்லை என்றால், நமது மாணவர்களை  வெற்றிபெறவைக்க ஏற்பாடுசெய்யுங்கள்.  நாம் உத்தமர்களாக இருக்க வேண்டாம். தமிழக மக்களுக்கு நன்மை செய்ய, நாம் அனைவரும் ஒன்று பட்டு நிற்க வேண்டும் என பேசினார். தேர்வில் காப்பி அடிக்க அனுமதிப்போம் என்ற முன்னாள் அமைச்சர் கே.என் நேருவின் இந்த பேச்சு சர்ச்சையாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios