Asianet News TamilAsianet News Tamil

கேரள அரசை சட்டமன்றத்தில் டார் டாராக கிழித்த கே.கே சைலஜா.. நடுக்கத்தில் பினராயி..

வங்கிக் கடன்களையும் அடைக்க முடியவில்லை, ஆனால் அரசால் சில ஆயிரங்கள் வழங்கப்பட்டுள்ளது, அதைக் கொண்டு அவர்கள் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? சிறு, குறு மற்றும் பாரம்பரிய தொழில் செய்பவர்களுக்கு கடன் வழங்க அரசு முன்வர வேண்டும், தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என  அவர் அடுக்கடுக்காக அரசின் மீது அதிருப்தியையும், குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

KK Sailaja, who Criticized Kerala government in the assembly Regarding corona issue. Pinarayi Vijayan Shocking.
Author
Chennai, First Published Jul 31, 2021, 10:53 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்றும், அதே நேரத்தில் கொரோனோ நிவாரணம் போதுமானதாக இல்லை என்றும், அம்மாநிலத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருமான கே.கே சைலஜா அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது முதலமைச்சர் பினராயி விஜயன்  மற்றும் கம்யூனிஸ்ட் சகாக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் முதல் அலை உச்சத்தில் இருந்தபோது அதை எந்த பதற்றமும் இல்லாமல், தனக்கே உரிய பாணியில், மிகச் சாதுரியமாக வியூகம் அமைத்து கட்டுக்குள் கொண்டு வந்தவர் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சைலஜா. அவரின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஐநா சபை உள்ளிட்ட ஒட்டுமொத்த உலக நாடுகளும் வெகுவாக பாராட்டின. 

KK Sailaja, who Criticized Kerala government in the assembly Regarding corona issue. Pinarayi Vijayan Shocking.

பிற மாநில மக்களும்கூட கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என தங்களது மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களை சமூகவலைதளத்தில் விமர்சிக்கும் அளவிற்கு அவரின் செயல்பாடுகள் நேர்த்தியாக இருந்தன. இதில் சமீபத்தில் கேரள சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த இரண்டாவது தவணையாக, பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. மீண்டும் சைலஜாவுக்கு அவரின் முந்தைய கால செயல்களை பாராட்டி, சுகாதாரத்துறை அமைச்சர் பதவி அல்லது முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு எந்த பதவியும் கொடுக்காமல் ஓரம் கட்டினார் பினராய் விஜயன். அவருக்கு மாற்றாக வீணா ஜார்ஜ் என்ற சட்டமன்ற உறுப்பினருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது  மெல்ல மெல்ல கட்டுக்குள் வந்து, பின் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது, கடந்த ஒருவாரமாக மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படும் நிலையில், அதை ஆராய்வதற்கான நிபுணர் குழுவையும் மத்திய அரசு கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. 

KK Sailaja, who Criticized Kerala government in the assembly Regarding corona issue. Pinarayi Vijayan Shocking.

சைலஜா சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது செயல்பட்ட அளவிற்கு தற்போது கேரள சுகாதாரத்துறை செயல்படவில்லை  என்று சொல்லும் அளவிற்கு அம்மாநில மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் அதற்கேற்றார்போல் சமீபத்தில் நடந்த  கேரள சட்டசபை கூட்டத்தில் கே.கே சைலஜாவுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது, அப்போது அவர் பேசியது எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என இரண்டு தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அக்கூட்டத்தில் சைலஜா பேசியதாவது: கொரோனா வைரஸ் பரவல் என்பது கேரளாவில் மிக முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. இது மிக மோசமான தருணம், இதன் பிரச்சனைகளை மக்கள் நேரடியாக அனுபவித்து வருகிறார்கள், அதற்காக மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்க நிவாரணம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு அவர்கள் வாழ்க்கை நடத்த முடியாது. அரசு கூடுதலாக அவர்களுக்கு உதவ முன் வர வேண்டும். இதை மிக முக்கிய பிரச்சனையாக அரசு கவனிக்க வேண்டும் எனக் கூறினார். மேலும் கொரோனா ஊரடங்கு, அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை கூட கட்ட முடியாமல் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். 

KK Sailaja, who Criticized Kerala government in the assembly Regarding corona issue. Pinarayi Vijayan Shocking.

வங்கிக் கடன்களையும் அடைக்க முடியவில்லை, ஆனால் அரசால் சில ஆயிரங்கள் வழங்கப்பட்டுள்ளது, அதைக் கொண்டு அவர்கள் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? சிறு, குறு மற்றும் பாரம்பரிய தொழில் செய்பவர்களுக்கு கடன் வழங்க அரசு முன்வர வேண்டும், தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என  அவர் அடுக்கடுக்காக அரசின் மீது அதிருப்தியையும், குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவரின் பேச்சுக்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் சைலஜா வைத்த கருத்துக்கள் பரிசீலிக்கப்படும் என கூறினார். சைலஜாவின் பேச்சால் எதிர்க்கட்சியினர் வாயடைத்துப் போய் உள்ளனர். அதே நேரத்தில் பினராயி விஜயன் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களை சைலஜாவின் குற்றச்சாட்டுக்கள் கதி கலங்க வைத்துள்ளது.  தன்னைப் புறக்கணித்தவர்களுக்கு சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளார் சைலஜா என பலரும் அவரது பேச்சை விமர்சித்து வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios