அரசியல் பேச்சாளர் கிஷோர் கே.சுவாமிக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு பதிலாக கே.கே.சாமி என்கிற மற்றொருவருக்கு கலைஞர் டி.வி.நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் பேச்சாளர் கிஷோர் கே.சுவாமிக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு பதிலாக கே.கே.சாமி என்கிற மற்றொருவருக்கு கலைஞர் டி.வி.நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கலைஞர் டிவி நிர்வாகத்துக்கு நோட்டீஸை கூட சரியாக உரியவருக்கு அனுப்பத் தெரியாதா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து கிஷோர் கே.சுவாமி தனது முகநூல் பக்கத்தில், ‘’கலைஞர் டி.வி செய்த கூத்து...'மானாட மார்பாட' புகழ் கலைஞர் டிவி குறித்து ஊருக்கே தெரியாத அவதூறை நான் பரப்பி விட்டதாகவும் அதற்காக இல்லாத மானத்திற்கு நஷ்டஈடு கேட்டு 1கோடி ரூபாய் வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஆனால் அதில்தான் ஒரு ட்விஸ்ட் தங்கள் தலைவரைப் போல ஆக சிறந்த தத்திகளைக் கொண்ட கலைஞர் டி.வி நோட்டீஸை எனக்கு அனுப்புவதற்கு பதிலாக கே.கே.சாமி என்கிற பெயரில் மைலாப்பூரில் கடை வைத்திருக்கும் ஐயர் மாமா வீட்டிற்கு அனுப்பித் தொலைத்தனர். திகிலான அப்பாவி மாமா அவருடைய வக்கீலை நாட வக்கீலுக்கு என்னைத் தெரிந்திருந்த காரணத்தினால் வக்கீல் என்னை நாட, மானாட மயிலாடி விட்டது.

இந்த நோட்டீஸை தயாரித்தவர் ராஜ்ய சபா எம்.பி வில்சனாம்... (பிகு: கீழே correct address உள்ளது. உங்களுக்குப் புரியும் வகையில் துண்டு சீட்டில் எழுதியுள்ளேன்)’’என தனது வீட்டின் முகவரியையும் எழுதி பகிர்ந்துள்ளார்.