இபிஎஸ்யை காலி செய்து, இரட்டை இலையை முடக்கி விடுவேன் என எச்சரித்த அண்ணாமலை.? கிஷோர் கே சாமி பரபரப்பு தகவல்
எடப்பாடியாரை காலி பண்ணிடுவேன்னு கமலாலாயத்துல பூட்டின கதவுக்குள்ள சுடக்கு போடக்கூடாது மிஸ்டர் அண்ணாமலை , முதுகெலும்பிருந்தால் துணிச்சலா பொதுவெளியில் சொல்லணும் என தேசியவாதி கிஷோர் கே சாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவும் பாஜகவும்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களும் தோல்வியை சந்தித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக 39 தொகுதிகளில் தோல்வியை தழுவியது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தையும் இழந்தது. இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவுன் கூட்டணி தொடரும் என பாஜக கூறி வருகிறது. இந்தநிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என இரண்டாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்த எந்த தலைமையோடு கூட்டணி வைப்பது என்ற குழப்பதில் அதிமுக உள்ளது. எனவே இரண்டு தரப்பையும் ஒன்றுபடுத்தினால் தான் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என பாஜக தேசிய தலைமை நினைத்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு தனி கொடி வேண்டும்..! பாஜகவினரை அலறவிடும் திமுக எம்எல்ஏவின் கோரிக்கை
25 தொகுதிகளை கைப்பற்ற பாஜக திட்டம்
இந்தநிலையில் தமிழகத்தில் 25 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என அண்ணாமலை கூறி வருவது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக தொடர்பாக பாஜகவும், பாஜக தொடர்பாக அதிமுக ஐடி விங் நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் மாறி, மாறி விமர்சித்து வருகின்றனர். இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் அண்ணாமலையின் நண்பரும், அதிமுக ஆதவராளருமான கிஷோர் கே சாமி கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிஷோர் கே சாமி வெளியிட்டு பதிவில்,
இரட்டை இலையை முடக்கிவிடுவேன்?
கமலாலயத்தில் நடந்த கட்சிக்கூட்டத்தில் மத்தியில் இரட்டை இலையை முடக்கி விடுவேன் எடப்பாடியாரை ஒருமையில் பேசி , காலி செய்துவிடுவேன் என்றெல்லாம் அண்ணாமலை பேசியதை வேடிக்கை பார்க்க அண்ணா தி மு க வினர் சப்பைகளா ??? என கேள்வி எழுப்பியுள்ளார்.மற்றொரு டுவிட்டர் பதிவில்,
அதிர்ச்சியில் அதிமுக- பாஜக
இரட்டை இலையை முடக்குவேன் , எடப்பாடியாரை காலி பண்ணிடுவேன்னு கமலாலாயத்துல பூட்டின கதவுக்குள்ள சுடக்கு போடக்கூடாது மிஸ்டர் அண்ணாமலை , முதுகெலும்பிருந்தால் துணிச்சலா பொதுவெளியில் சொல்லணும் , சொல்லிட்டு நீங்க தேர்தலில் டெப்பாசிட் வாங்கி காட்டுங்க , திறந்த நிலை சவால் என கிஷோர் கே சாமி கூறியிருப்பது பாஜக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்