Asianet News TamilAsianet News Tamil

தெலங்கானாவுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.... ஆளுநராகும் தமிழிசைக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாய்ஸ்!

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை தெலங்கானா ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதற்கு தமிழகத்தில் சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கேள்விப்பட்டேன். இந்த எதிர்ப்புகளைப் பற்றி கவலைக்கொள்ள தேவையில்லை. எதிர்க்கட்சிகள் என்றால் எதிர்க்கத்தான் செய்வார்கள். 
 

Kiranbedi is  welcoming tamilisai appointment post  of governor
Author
Chennai, First Published Sep 4, 2019, 7:18 AM IST

தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டிருப்பதால அந்த மாநில மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று நம்புவதாக புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.Kiranbedi is  welcoming tamilisai appointment post  of governor
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சென்னை விமான நிலையத்தில் செய்தியார்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசையைப் பற்றியும் கிரண்பேடி கருத்து தெரிவித்தார்.  “தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை தெலங்கானா ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதற்கு தமிழகத்தில் சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கேள்விப்பட்டேன். இந்த எதிர்ப்புகளைப் பற்றி கவலைக்கொள்ள தேவையில்லை. எதிர்க்கட்சிகள் என்றால் எதிர்க்கத்தான் செய்வார்கள். Kiranbedi is  welcoming tamilisai appointment post  of governor
மாநில ஆளுநர்களை இந்திய அரசுதான் நியமிக்கிறது. தமிழிசை நியமனத்தில் எந்தத் தவறும் இல்லை. இது ஓர் அரசியல் சாசன பதவி. தமிழிசை சவுந்தரராஜன் மக்கள் சேவகராகவும் மருத்துவராகவும் பணியாற்றி செய்திருக்கிறார். அவர் தற்போது தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம் அந்த மாநில மக்களுக்கு அதிக நன்மை கிடைக்கும் என்று நம்புகிறேன்.” என்று கிரண்பேடி தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios