Asianet News TamilAsianet News Tamil

பகவத் கீதையைத் தத்துவப் படிப்பில் சேர்த்தது நச் முடிவு... அண்ணா பல்கலை.யை மெச்சிய கிரண்பேடி!

எதிர்ப்பையடுத்து தத்துவ பாடமாகவே பகவத் கீதை சேர்க்கப்பட்டிருப்பதாகவும் இது விருப்ப பாடமாகவே அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகம் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்தது. 

Kiran bedi welcomes on  Bkavatkeeta syllabus include in anna university
Author
Puducherry, First Published Oct 3, 2019, 9:45 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையைத் தத்துவப் படிப்பில் சேர்த்திருப்பதை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வரவேற்றுள்ளார்.Kiran bedi welcomes on  Bkavatkeeta syllabus include in anna university
அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை ஒரு பாடமாக சேர்த்து தகவல் அண்மையில் வெளியானது. இந்தத் தகவல் வெளியான உடனே அது பெரும் சர்ச்சையானது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் மோடி, எடப்பாடி அரசுகளை தமிழக அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்தன. Kiran bedi welcomes on  Bkavatkeeta syllabus include in anna university
எதிர்ப்பையடுத்து தத்துவ பாடமாகவே பகவத் கீதை சேர்க்கப்பட்டிருப்பதாகவும் இது விருப்ப பாடமாகவே அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகம் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்தது. பொறியியல் கல்லூரிகள் பகவத் கீதை படிப்பு புகுத்துவதாகக் கூறி திமுக மாணவரணி சார்பில் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பகவத் கீதையைத் தத்துவ படிப்பில் சேர்த்திருப்பதை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வரவேற்றுள்ளார்.

 Kiran bedi welcomes on  Bkavatkeeta syllabus include in anna university
இதுகுறித்து அவர் கூறுகையில், “பகவத்கீதையானது எல்லா மதத்தினருக்கும் பொதுவானது. ஒரு மதத்தோடு பகவத் கீதையைக் குறிப்பிட்டு கூறுவது தவறு. அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத்கீதையைத் தத்துவப் படிப்பில் இணைத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. மனிதனுடைய வாழ்வாதாரத்தையும், புரிதலையும் அறிய பகவத்கீதை உதவும்” என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios