அமெரிக்காவிற்கு நெருக்கடி தரும் விதமாக அணு அயூத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வந்த கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேச முன் வந்தார். மேலும் வடகொரியா அணு ஆயுதங்களை சோதனை செய்யும் பணியை நிறுத்துவதாகவும் அவர் அறிவித்தார்.

வடகொரியாவில் கடந்த  6 ஆண்டுகளாக அணு ஆயுத சோதனைகளை  நடைபெற்று வந்த நிலையில் இனி மேல் அணு ஆயுத சோதனைகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் சமீபத்தில் தெரிவித்தார். வடகொரிய அதிபரின் இந்த முடிவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரவேற்பளித்தார். வடகொரியாவுக்கு மட்டுமின்றி உலகிற்கே இது நல்ல செய்தி எனவும் அவர் கூறினார்.இதனைத்தொடர்ந்து அமெரிக்கா அதிபர் டெனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சந்தித்து பேச இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் இருவரும் சந்தித்து பேசுவதற்கான தேதி மற்றும் இடம் முடிவு செய்யப்படாமலே இருந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங்கை சந்தித்து பேசுவதற்கான தேதி மற்றும் இடம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மாநாட்டில், கிம் ஜாங் உன் உடன்  சந்திப்பு நடைபெற ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.