Asianet News TamilAsianet News Tamil

ஆர்எஸ்எஸ்காரராக நடந்துகொள்ளும் ஆர்.என். ரவி..! மத்திய அரசு தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும்- கி.வீரமணி

தமிழகத்தில் நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது அதனை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசின் தூதுவராக ஆர் எஸ் எஸ் இன் கொள்கைகளை ஏற்று தமிழகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை ஆளுநர் செய்து வருகிறார் என கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

Ki Veeramani has insisted that the central government should take back Tamil Nadu Governor RN Ravi
Author
First Published Jan 10, 2023, 11:32 AM IST

தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர் என் ரவி பாதியில் வெளியேறியது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி வீரமணி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  தமிழக ஆளுநர் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அரசியல் அமைப்பு சட்டத்தில் அவருக்கு எந்த அதிகாரிகளும் வழங்கப்படவில்லை, தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் தனித்து உரையாற்றியிருப்பது மற்றும் பாதியிலேயே வெளியேறியது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் எனவும், தமிழக அரசியல் வரலாற்றில் சட்டசபையில் ஆளுநர் எப்படி அநாகரிகமாக நடந்து கொண்டது இதுவே முதல்முறை இது கண்ணியமற்ற செயல் எனவும் தெரிவித்தார். ஆளுநர் உரை என்பது ஆளுநர் தயாரிப்பது அல்ல, அரசு மற்றும் அரசின் அமைச்சர்கள் மூலமாக அரசு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதை வாசிக்கும் உரிமை மட்டுமே ஆளுநருக்கு உள்ளது. 

தமிழக கட்சிகளை மீண்டும் சீண்டிய ஆர்.என்.ரவி.! பொங்கல் விழா அழைப்பிதல்.! தமிழ்நாட்டில் இருந்து தமிழகமாக மாற்றம்

Ki Veeramani has insisted that the central government should take back Tamil Nadu Governor RN Ravi

இதேபோல் ஒன்றிய அரசிலும் பிரதமர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு முன்பு அரசின் திட்டங்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கும் வழக்கம் உள்ளது. அதை குடியரசுத் தலைவர் வாசிப்பாரே தவிர குறுக்கீடு செய்ய முடியாது. அதே போல் தான் மாநில அரசுகளிலும் ஆளுநருக்கு வாசிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. அதை இவர் கொச்சைப்படுத்தி உள்ளார். ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை அது அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும் அது மரபும் கூட அந்த மரபை தமிழக ஆளுநர் ரவி மீறி உள்ளதாக குற்றம்சாட்டினார். 

நான் அப்பவே சொன்னேன்.. ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி.. எச்.ராஜா..!

Ki Veeramani has insisted that the central government should take back Tamil Nadu Governor RN Ravi

தமிழக ஆளுநர் ஆளுநராக நடப்பதில்லை அவர் ஆர்எஸ்எஸ் காரராக நடந்து கொள்கிறார். தமிழகத்தில் நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது அதனை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசின் தூதுவராக ஆர் எஸ் எஸ் இன் கொள்கைகளை ஏற்று தமிழகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை ஆளுநர் செய்து வருகிறார் என குற்றம் சாட்டினார். அவர் ஒரு அரசு ஊழியர். ஆனால் அரசுக்கு எதிராகவும் மக்களுக்கு எதிராகவும் பேசி வருவது கண்டகணத்திற்குரியது. மத்திய அரசு உடனடியாக அவரை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Ki Veeramani has insisted that the central government should take back Tamil Nadu Governor RN Ravi

 தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட அரசின் கொள்கைகளால் மக்கள் நலமுடன் உள்ளனர். ஆனால் இது போன்று ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் இன்று சட்டசபையையே அவமானப்படுத்தி சென்றுள்ளதை ஏற்க முடியாது உடனடியாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கி.வீரமணி கேட்டுக்கொண்டார். 

இதையும் படியுங்கள்

ஆளுநர் பேச்சுக்கு தடங்கல்..! மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுத்திடுக..! சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்த பாஜக

Follow Us:
Download App:
  • android
  • ios