மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசை பாரத பேரரசு என்றே அழைப்போம் என நடிகை குஷ்பு ட்வீட் செய்திருப்பது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மத்திய அரசை, ஒன்றிய அரசு என தி.மு.க., நிதி அமைச்சர் தியாகராஜன் பேசி வருகிறார். சமீப காலமாக தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும், இந்திய அரசை 'ஒன்றிய அரசு' எனக் குறிப்பிட்டு வருவதன் பின்னால், திராவிட நாடு என்ற கோரிக்கை ஒளிந்து கிடக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 
தி.மு.க., நிதி அமைச்சர் தியாகராஜனும், சமீபத்தில் அளித்த பேட்டியில், மத்திய அரசை, ஒன்றிய அரசு என குறிப்பிட்டு, 'சட்டத்தில் அப்படி தான் இருக்கிறது' என விளக்கம் அளித்தார். அவரை தொடர்ந்து தி.மு.க.,வினர், மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ’’தமிழ்நாட்டில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைத்தால், நாம் பாரத பேரரசு என்று அழைப்போம், என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
