இங்கே குஷ்பு... அங்கே நயினார் நாகேந்திரன்...'' இது தான் சில நாட்களாக அரசியல் அரங்கில் பேசுபொருளாக இருக்கிறது. 

கல்விக்கொள்கைக்கு ஆதரவாக பேசியது முதல் குஷ்பு பா.ஜ.க.வில் சேரப் போவதாக தொடர்ந்து தகவல் வந்து கொண்டே இருக்கிறது. அவருக்கு தமிழக பாஜக தலைவர்கள் பலரும் அழைப்பு விடுத்து வருகின்றனர். குஷ்புவின் கணவர் சுந்தர் சி கூட பாஜக தலைவர் எல்.முருகனை ரகசியமாக சந்தித்து வந்ததாகவும் பேச்சுகள் அடிபட்டது. 

குஷ்பு இணைய இருப்பது எப்போது எனத் தெரியாது. இணையாமல் கூட போகலாம்.  ஆனால்  இந்த விவகாரத்தை கிளப்பி காங்கிரஸை குழப்புவதுதான் பாஜகவின் அஜெண்டா. ஆனால், இந்த விவகாரம் விவகாரம் பெரிதாக பேசப்படக் கூடாது. நமது பங்குக்கு ஒரு அதிரடி கொடுக்க வேண்டும் என்கிற 'ஹோதா'வில்  தி.மு.க., இறங்கி இருக்கிறது.

'பா.ஜ.கவில் பதவி கிடைக்காத விரக்தியில் நயினார் நாகேந்திரன் இருக்கிறார். அவர் தி.மு.க.,வில் இணைய இருப்பதாக சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. 'அதெல்லாம் ஒண்ணும் இல்லே'ன்னு அவர் மறுத்தார்.

''அதற்கு மறுப்பு தெரிவிப்பது போல், 'அதெல்லாம் ஒண்ணும் இல்லே... இதோ இன்னிக்கு அவரை, பா.ஜ.க,வில் இருந்து துாக்கறோம்... சேரப் போறார் பாருங்கோ...'என திமுக கூறி வருகிறது. ஆக, குஷ்பு இங்கே போகிறார். நயினார் நாகேந்திரன், அங்கே போறார்...'' எனக் கிளப்பி விடுவதாக கூறப்படுகிறது.