Khushbu for BJP its Nakhatkhan Actress Kushbu smashes BJP

நடிகையும், காங். செய்தி தொடர்பாளருமான குஷ்பு, அந்த நபரின் இனிஷியல் எச்சை என்று சரியாக உள்ளது என்றும், பாஜகவினருக்கு சில காட்டமான பதிவுகளையும் பதிவு செய்துள்ளார்.

நடிகை குஷ்பூவின் இயற்பெயர் நக்கத் கான். குஷ்புவின் இயற்பெயரைக் கண்டுபிடித்துவிட்ட பாரதிய ஜனதா கட்சியினர், இது குறித்து டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டு வந்தனர்.

இது குறித்து நடிகை குஷ்பு, அவடர்டகளை அவமானப்படுத்தும் விதமாக தனது டுவிட்டரில் உள்ள தனது பெயரை மாற்றியுள்ளார். பாஜாகவினருக்காக சில காட்டமான பதிவுகளையும் அவர் பதிவிட்டுள்ளார்.

அதாவது, ஆம் என் பெயர் நக்கத் கான். இதையே இப்பத்தான் கண்டுபிடித்தீர்களா? என கேட்டு பாஜகவினரை அசிங்கப்படுத்தியுள்ளார். என் பெயர் நக்கத்கான் என்பதை நான் மறைக்கவில்லை என்றும் குஷ்பு விளக்கம் கொடுத்துள்ளார்.

பாஜகவின் பதிலடி கொடுக்கும் வகையில், தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பெயரை குஷ்பு சுந்தர்.. பாஜகவுக்கு நக்கத் கான் என்று மாற்றி விட்டார். 

அது மட்டுமல்லாது, திமுக எம்.பி. கனிமொழியை குறித்து தவறாக விமர்சனம் செய்த எச்.ராஜாவை மறைமுகமாகவும் குஷ்பு தாக்கி பேசியுள்ளார்.

அதில், அந்த நபரின் இனிஷியல் எச்சை என்று சரியாக உள்ளது என்று குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.