ரஜினி அரசியல் வருகை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்து இருந்த நிலையில் பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்புவும் கருத்து தெரிவித்து உள்ளார். 

தன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலை விட்டு ஒதுங்குவதற்கு நடிகர் ரஜினிகாந்த் முடிவெடுத்து இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், திருமாவளவன், ‘’நடிகர் ரஜினிகாந்த் உடல் நலத்தை காத்துகொள்ள வேண்டும். அரசியலில் வந்து ஜாதி மத பிடியில் சிக்கி மன உளைச்சல் ஆகாமல் அரசியலுக்கு  வராமல் இருப்பது நல்லது’’எனத் தெரிவித்து இருந்தார்.

 

இந்த நிலையில் பாஜகவில் அண்மையில் சேர்ந்திருக்கிற குஷ்பு, சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு சில அறிவுரைகளை தனது ட்விட்டர் பதிவின்மூல கூறியிருக்கிறார். அதில், ‘’அன்புள்ள ரஜினி சார்,  உங்களது ஆரோக்கியமான உடல்நலம், உங்களது மகிழ்ச்சி, இவைகளைத் தவிர எங்களுக்கு வேறு சந்தோசமும் கிடையாது.

நீங்கள் எங்களின்அபூர்வ வைரம். நீங்கள் எங்களின் சொத்து. உங்களுக்கு எது நல்லதோ அதை செய்யுங்கள்.! எந்த வகையிலும் உங்கள் மீதான எங்களின் அன்பு குறையப் போவதில்லை. எங்களுக்கு நீங்கள் முன்மாதிரியானவர் ”எனக் கூறியிருக்கிறார்.