தண்ணீர் பஞ்சத்தால் தாகத்தில் தவிக்கும் தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க முன் வந்துள்ளது கேரள அரசு. 

தமிழகத்தில் சில இடங்களில் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் திண்டாடுகின்றனர். பல மைல்கல் சென்று குடிக்க தண்ணீர் கொண்டு வருகின்றனர். சுனைகளில், ஊற்றுகளில், கள் குவாரிகளில் என்று மக்கள் கடும் வெயிலில் கால் கடுக்க நடந்து சென்று தண்ணீர் கொண்டு வருகின்றனர்.

 

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மக்கள் பாதி நேரம் தண்ணீர் லாரி பின்னே சென்று கொண்டு இருக்கின்றனர். அனதலவிற்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் லாரி பெரும்பாலும் இரவில் வருவதால், வேலைக்குச் செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல்வரின் செயலாளர் குடிநீர் கேட்டு கேரள அரசிற்கு கடிதம் அனுப்பினார். அதனை ஏற்றுக் கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை திருவணந்தபுரத்தில் இருந்து ரயில் மூலம் தமிழகத்திற்கு அனுப்பப்படும் என அறிவித்துள்ளார்.