இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது கேரள மாநிலம். வரலாறு காணாத பெருமழையால் கேரளம் சந்தித்திருக்கும் இந்த வெள்ளத்தையும், நிலச்சரிவையும் தேசிய பேரிடராக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. 370க்கு அதிகமான மக்களின் உயிரை கேரளாவில் ஏற்பட்ட இந்த இயற்கை சீற்றம் பறித்து சென்றிருக்கிறது. 

கேரளத்தின் பல பகுதிகளும் பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறது இந்த இயற்கை பேரிடரால்.
தொடந்து அரசிடமும், மக்களிடமும் இருந்து வரும் நிவாரணங்களை கொண்டு கேரளத்தை சீரமைக்கு பணியில் தற்போது மூழ்கி இருக்கின்றார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இப்படி ஒரு மாநிலமே தத்தளித்து கொண்டிருந்த தருணத்தில் கேரளத்தை சேர்ந்த வனத்துறை அமைச்சரான ராஜு ஜெர்மனி சென்றிருக்கிறார்.
அவர் ஜெர்மனியில் சென்று கேரள அமைப்புகள் நடத்திய ஓணம் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விஷயம் இதனால் ஊடகங்களில் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.

இதற்கு பதிலளித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ஐக்கியநாடுகள் சபையின் பொதுச்செயலாராக இருந்து பல சமுக சேவைகளை திறம்பட செய்த கோபி அனனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்த தான் ராஜு ஜெர்மனி சென்றிருக்கிறார் என தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இது குறித்து பேசிய எதிர்கட்சியினரோ, ராஜு ஜெர்மனிக்கு சென்ற காரணம் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம், ஆனால் அவர் கேரளா திரும்ப விமானம் கிடைக்கவில்லை எனும் காரணத்தினால் அங்கே இருந்ததை கூட விட்டுவிடலாம் . அங்கு நடந்த பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த மேற்கொண்ட தன்னுடைய பயணத்தை சுற்றுலா போல திட்டமிட்டபடி உல்லாசமாக அனுபவித்ததை தான் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது அதுவும் கேரளமே வெள்ளத்தில் மூழ்கி கொண்டிருந்த தருணத்தில் அவர் இவ்வாறு செய்தது கண்டிக்கத்தக்கது என தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் அவர் முதல்வரிம் தன்னுடைய பயணம் குறித்து கடிதம் மூலம் தெரிவித்திருக்க வேண்டும். அவருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார். ஆனால் ராஜு அமைச்சர் திலோத்தமனிடம் தான் தன்னுடைய கடிதத்தை ஒப்படைத்திருக்கிறார். 

மேலும் அவர் தரும் எந்த விளக்கங்களும் நியாயமானதாக இல்லை என்றும் எதிர் கட்சியினர் தெரிவித்திருக்கின்றனர். இதை எல்லாம் தாண்டி மக்கள் அங்கு தவித்து கொண்டிருக்கையில், முதல்வர் இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டங்கள் வேண்டாம் என கூறி இருக்கும் துயரான தருணத்தில் அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஜெர்மனியில் உல்லாசமாக சுற்றுலா பயணம் செய்து கொண்டு இருந்தது உச்ச கட்ட தவறு என கடுப்பாகி இருக்கின்றனர் எதிர்கட்சியினரும் பொதுமக்களும்.