பிரதமர் மோடி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ள நிலையில் கேரளாவில் மதுபான கடைகளை மூடுவதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  கேரளாவிலும் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மாநில அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது . சீனாவில் தோன்றிய  கொரோனா வைரஸ்  இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது .  இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால்  மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது.   இந்நிலையில் நேற்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி 21 நாட்கள் தேசிய ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருவதாக அறிவித்தார்.  இதனையடுத்து  கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் மத்திய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார் அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை அரசு மதுபான விற்பனை நிலையங்களை மூட கேரளா அரசு முடிவு செய்துள்ளது.  

மதுபானம் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது, இன்று முதல் மதுபான விற்பனை நிறுத்தப்படுவதாக கேரளாவின் கலால்துறை அமைச்சர் டி பி ராமகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார் .  அதாவது கடந்த மார்ச் 23ஆம் தேதி மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மாநிலம் தழுவிய அளவிலான ஊரடங்கு அறிவித்தார் ஆனால் மது விற்பனை நிலையங்களை மட்டும் அவர் அனுமதித்திருந்தார் .  இந்நிலையில் மதுபான விற்பனை நிலையங்களையும் மூட அதிரடியாக  உத்தரவிடப்பட்டுள்ளார்.  இதற்கிடையில் கேரள அரசும் கலால் துறையும் விற்பனை நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்க ஆன்லைன் மூலம் மதுபான விற்பனை சேவையை தொடங்க திட்டமிட்ட நிலையில் அதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதால் அதை கைவிட்டனர். அதே நேரத்தில் ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என ரெஸ்டாரன்ட் அசோசியேஷன் சங்கத்தினர்  கோரிக்கை வைத்திருந்தனர். கொரோனா  வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து  காங்கிரஸ் தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள்,  மதுபான விற்பனை நிலையங்களை  மூட வேண்டும் என போராடி வந்தனர். 

இந்நிலையில் மதுபான  விற்பனையகங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக மற்ற மாநிலங்களைவிட கேரளாவிலேயே மது குடிப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது .  37 சதவீதம் பேர் ஆல்கஹால் பயன்படுத்துபவர்களாக உள்ளனர் .  ஒரு தனிநபர் ஆண்டிற்கு 8 லிட்டர் வரை ஆல்கஹால் பயன்படுத்துபவராக உள்ளார்.  சுமார் 4.8 சதவீதம் பேர் அதிதீவிர மது குடிப்போராக உள்ளனர் .  இந்நிலையில் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியின் பாதிரியாரும் மனநல மருத்துவருமான  தேவ் அக்காரா திடீரென கேரளாவில் மதுபானக் கடைகள் மூடப்பட்டால் அதை சார்ந்துள்ளவர்களுக்கு அது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார் நிச்சயம் அவர்களுக்கு மருத்துவ மருத்துவ  உதவிகள் தேவைப்படும் என்பதுடன்,   1.6 மில்லியன் மக்களுக்கு சிகிச்சை வழங்களும் அளவிற்கு கேரளாவில் மருத்துவ வசதிகள் இல்லை என்றும் தேவ் சுட்டிக்காட்டியுள்ளார்.