சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பலரும் ஆதரவும், இந்து அமைப்புகள் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 

இதையடுத்து நேற்று முன்தினம்  சபரிமலையில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமானாது. கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து போராட்டக்காரர்கள் காலில் விழுந்து முறையிட்டு திருப்பி அனுப்பினர். மேலும், பெண் காவலர்கள் அங்கு பணியாற்றவும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த வித முடிவும் எடுக்கலாம் என தேவசம் போர்டுக்கு கேரள அரசு முழு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் போராட்டக் காரர்களின் எதிர்ப்பையும் மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்துக்குள் நுழைய  2 பெண்கள் முயன்றனர்.

ஆந்திராவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர்  கவிதா மற்றும் பெண்ணியவாதி ரஹானா பாத்திமா  ஆகிய இருவரும் கருப்பு ஆடையுடன் இருமுடி சுமந்து கொண்டு சபரிமலை சென்றனர்.

அந்த பெண்கள் ஹெல்மெட் அணிந்து சென்றனர். அவர்களைச் சுற்றி நூற்றுக் கணக்கான போலீசார் அரணாக நின்று பாதுகாப்பு கொடுத்தனர். ஆனால் அய்யப்ப பக்தர்கள் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து போலீசார் போராட்டங்கார்களுடன் பேச்சு வார்வ்ர்த்தை நடத்தினர். ஆனால் அவர்களை உள்ளே விடக் கூடாது என பக்தர்கள் உறுதியான இருந்தனர்.

இந்நிலையில் சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரஹானா ஃபாத்திமா ஆகிய இருவரையும் கோவிலுக்குள் நுழைக்கூடாது கேரள அரசு உத்தவிட்டுள்ளது. சபரிமலை என்பது போராட்டக் களம் அல்ல என்றும் அதற்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.இதையடுத்து அங்கு பதற்றம் தணிந்துள்ளது.

ஆனால் இந்த ஒரு பெண்களும் விளம்பரத்துககாக உள்ளே நுழைய  முயன்ற விவரம் தற்போது அம்பலமாகியுள்ளது. இது அனைத்து மதத்தினரையுமே புண்படுத்தியுள்ளது.