அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற வாதத்தை முதலில் முன்வைத்தவர் தந்தைப் பெரியார். அவரது கொள்கையை ஏற்று அரசாணையை 1970ம் ஆண்டு வெளியிட்டவர் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி. ஆனால், வழக்குகளில் விளைவாகத் தமிழகத்தில் இன்னும் அதைச் செய்யமுடியவில்லை.

இந்த சமயத்தில் கேரளாவில் தலித் இளைஞர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருப்பது இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்குகிறது. பினராயி விஜயன் முதல்வராகி இப்படி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

 

இந்த நிலையில் அவர் மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மகா புயலால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிவாரண நிதி வழங்கிய பிரனாவ் என்ற மாற்றுத்திறனாளி சிறுவனை பாராட்டிய முதல்வர் பினராயி விஜயன் வருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.  இரு கைகளையும் இழந்த அந்த இளைஞர் காலில் வழங்கிய காசோலையையும், காலால் எடுத்துக் கொண்ட செல்ஃபியும் வைரலாகி வருகிறது. 

உலகின் தலைசிறந்த செல்ஃபி என பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டும் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.