Asianet News TamilAsianet News Tamil

பினராயி விஜயனைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்... எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்..!

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்;- "கேரள சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன், மத்திய பாஜக அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது மிகுந்த மனமகிழ்ச்சியை அளிக்கிறது.

Kerala Assembly Passes Resolution...mk Stalin advice to Edappadi palanisamy
Author
Tamil Nadu, First Published Dec 31, 2019, 5:07 PM IST

குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளாவை போன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும், ஆளும் இடதுசாரிக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இணைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனையடுத்து, கேரள சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், பாஜக எம்எல்ஏ ஓ.ராஜகோபால் தவிர்த்து இதர உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.

Kerala Assembly Passes Resolution...mk Stalin advice to Edappadi palanisamy

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்;- "கேரள சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன், மத்திய பாஜக அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது மிகுந்த மனமகிழ்ச்சியை அளிக்கிறது.

Kerala Assembly Passes Resolution...mk Stalin advice to Edappadi palanisamy

அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் போற்றிப் பாதுகாக்கும் இந்தப் பணியை ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையும் நிறைவேற்ற வேண்டும் என்பது நாட்டு மக்களின் பெருவிருப்பமாக இருக்கிறது. ஆகவே, வருகின்ற ஜனவரி 6-ம் தேதி கூடும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில், இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios