Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் கொரோனோவுக்கு முதல் மரணம்...!! அதிர்ச்சியில் மக்கள், பீதியில் பினராய் அரசு..!!

இந்நிலையில் மருத்துவர்கள் அவளை காப்பாற்ற எவ்வளவோ போராடியும் அந்த நபர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .  இது கேரளாவில் கொரோனா வைரசுக்கு  ஏற்பட்ட முதல் மரணம் என பதிவு செய்யப்பட்டுள்ளது . 

Kerala announce first death for corona , Kerala peoples fear
Author
Kerala, First Published Mar 28, 2020, 1:47 PM IST

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கேரள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் , அவருக்கு வயது 69,   இதனை அடுத்து கொரோனா  வைரசுக்கு கேரளாவின் உயிரிழந்த முதல் நபர் என அறிவிக்கப்பட்டுள்ளார் .  இதன் மூலம் இந்தியாவில் கொரோனா  வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது .  சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா  வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  இந்நிலையில் இந்தியாவில் வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.  

Kerala announce first death for corona , Kerala peoples fear

இந்நிலையில் கேரளா கொரோனாவால்  அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்து வருகிறது .  இந்நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் காரணமாக முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அம்மாநில அரசு உறுதி செய்துள்ளது . கடந்த மார்ச் 22ஆம் தேதி சளி இருமல் அறிகுறிகளுடன் 69 வயது நபர் ஒருவர் கொச்சியில் உள்ள காலமாச்சேரி அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு  சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது . அவரது உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது . 

Kerala announce first death for corona , Kerala peoples fear

இந்நிலையில் மருத்துவர்கள் அவளை காப்பாற்ற எவ்வளவோ போராடியும் அந்த நபர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .  இது கேரளாவில் கொரோனா வைரசுக்கு  ஏற்பட்ட முதல் மரணம் என பதிவு செய்யப்பட்டுள்ளது .  ஏற்கனவே அந்த நபர் இதய நோய் மற்றும் ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்ததும் ,  அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததும்  குறிப்பிடத்தக்கது .  இந்நிலையில் அவரது  சடலத்தை அவரது உறவினர்களிடம் மாநில அரசு அதிகாரிகள் ஒப்படைத்தனர் இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 21 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios